திருவிளக்கு பூஜை என்பது என்ன.? திருவிளக்கு வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும்.. வழிபாட்டின் பலன்கள் என்ன..? தெரிந்து கொள்வோம்…

ஆன்மிகம்
இந்து மதத்தில் திருவிளக்கு வழிபாடு என்பது உன்னதமான ஒன்று. வேத காலந்தொட்டு மகரிஷிகள் அக்னி வளர்த்து வேள்வி நடத்தி இறைவனை வழிப்பட்டு வந்தனர். இன்று திருவிளக்கு தீபவழிபாடாக மாறியுள்ளது.
திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் தூய்மையும், தெய்வத்தன்மையும் பெருகுகின்றன. அதுமட்டுமின்றி திருவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றி மனதில் இருளை போக்குகிறது.
மேலும் தினமும் திருவிளக்கு வழிபாடு நடைபெறும் வீடுகளில் தெய்வபலம் பெருகி கெட்ட சக்திகள் மற்றும் செய்வினைகள் நம்மளை அணுகாது. எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் இறைவனை வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மேலும் வீட்டு  பூசையறைக்குள் வைத்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமி இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். மேலும் இந்த திருவிளக்கு வழிபாடு பெண்களுக்கு உரித்தான வழிபாடாகும். அதுமட்டுமின்றி பெண்கள் ஒன்றிணைந்து கோயில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது.
இந்த விளக்கு வழிபாட்டால் பல ஹோமங்களை நடத்துவதால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதை ஆண்களும் செய்யலாம். மேலும் திருவிளக்கு வழிபாடு ஏற்ற நாள், நேரம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்தால் மிகவும் நல்லது.