திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரி பிரிந்துள்ள தமிழ் திரைப்படத்தில் நடித்த நட்சத்திர தம்பதி! வெளியிட்ட காரணம்..?

செய்திகள்

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்டார் ஜோடி விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகியோர் கடந்த வருடம் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து‌ கொண்டதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நோயல், நீண்ட மௌனங்களுக்கு பிறகு தற்போது இதனை‌ அறிவிக்கிறேன். கோர்ட் முடிவுகளுக்கு பிறகு அறிவிப்பது தான்‌ முறை.‌ எங்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த மாற்றுக் கருத்து காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை எஸ்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நோயாலும் நானும் கடந்த வருடம்‌ ஜனவரியில் திருமணம் செய்தோம். தொடர்ந்து நிலவிய பிரச்சினைகள் காரணமாக அதே வருடம் ஜூன் மாதம் விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். நேற்று தான் எங்களுக்கு விவாகரத்து கிடைத்தது என்றார்