தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனிதா. இந்தி படத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார்.
மேலும் இவர் 2002ல் வெளியான நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் நடித்திருந்தார் நடிகை அனிதா. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த அனிதா 2013ல் ரோஷித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பில் ஆர்வம் கொண்டு படங்களில் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சீரியல்களிலும் தற்போது நடித்து வந்த நடிகை அனிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த மாதம் பிப்ரவரி 9ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். தற்போது அனிதா குழந்தையின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram