திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு கர்ப்பமாகியுள்ள விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி!! அட இவரா என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். அந்த டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார்.

இந்த தொலைக்காட்சியிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஜோடி No1 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனம் எல்லாம் ஆடியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடக்க வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ஐஸ்வர்யா சில போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு தன் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனவும் பதிவு செய்துள்ளார்.