திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல இயக்குனர்!! அவரே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!!

செய்திகள்

மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சஜி சுரேந்திரன். இவர் விவஹிதரயால் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கினார்.

இயக்குனர் சஜி கடந்த 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சங்கீதா கர்ப்பமானார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வாரிசு வரப் போவதை எதிர்பார்த்து குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது.

மேலும் இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சஜி சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி பதிவு செய்துள்ளார்.

குழந்தை வரத்திற்காக 16 ஆண்டுகளாக ஏங்கி வந்த சஜி சுரேந்தர் சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஏ க்கத்துடன் இருந்தவர்களுக்கு குழந்தை பிறந்ததால் அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக தான் வரும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், சஜி சுரேந்திரனுக்கும் சங்கீதாவுக்கும் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.