திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் குழந்தைக்கு அப்பவாகியுள்ள பிரபல முன்னணி நடிகர்!! ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் இயக்குனர்களாகவும், பாடகர்களாகவும்,  தயாரிப்பாளர்கள் என பல பரிமாணங்களை எடுத்து வருகின்றனர். அதே போல் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் இவர்களுக்கு இணையாக கதாநாயகனாக திரைப்படங்களில் வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி தாயரிப்பாளராக இருந்து தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் ஆர்.கே.சுரேஷ். இவர் முதலில் பல படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் தர்மதுரை படத்தில் ஒரு பாடல் காட்சியிலும் தோன்றியிருப்பார்.

இந்நிலையில் படங்களை தயாரிப்பதை தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திய ஆர்.கே.சுரேஷ் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றிப்படமான தாரை தப்பட்டை படத்தில் வி ல்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் சினிமா வட்டாரத்தில் பெரும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.மேலும் கடந்த ஆண்டு இவரே தயாரித்து கதாநாயகனாக நடித்து வெளியாகி பலத்த வெற்றியை பெற்ற திரைப்படம் பில்லா பாண்டி.

இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு 2017-ம் ஆண்டு பிரபல தொடர் நடிகையான திவ்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும் அது திருமணம் வரை செல்லாமல் நின்று  போனது.

இது கூறித்து திவ்யா அவர்களிடம் கேட்ட போது அவர் மிகவும் நல்ல மனிதர், ஆனால் எங்களுக்குள் நிறைய கருத்துகள் வேறுபடுவதால் இதனால் எங்களுக்குள் திருமணத்திற்கு பிறகு பெரிய பி ரச்சனைகள் வரக்கூடும் அதனால் எங்களுக்குள் நாங்களே பேசி திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமணத்தை வேண்டாம் என ம றுத்து விட்டோம் என கூறியிருந்தார்.

இப்படி இருக்கையில் ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கும் திரைப்பட பைனன்சியாரான மது என்பவருக்கும் கடந்த வருடம் ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் யாருக்கும் தெரியாத வகையில் அந்த திருமணம் நடந்துள்ளது.

இது கூறித்து ஆர்.கே.சுரேஷ் தனது இணைய பக்கத்தில், என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றுள்ள சந்தோஷமான தருணத்தை உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பகிர்கிறேன் எனக்கு திருமணம் முடிந்து விட்டது உங்களின் அன்பு மற்றும் ஆதரவு  வாழ்த்துகளுக்கு நன்றி என்னுடைய தனி உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து கொள்கிறேன் என கூறியிருந்தார்.

ஆனால் இந்த பதிவை பதிவிட்ட சில மாதங்களிலேயே அதை நீக்கியுள்ளார் ஆர்.கே.சுரேஷ். காரணம் திருமணம் முடிந்து விட்டது என பதிவிட்ட ஆறு மாதத்திலேயே இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒரு வேலை திருமணம் செய்து கொண்டு பல மாதங்கள் கழித்து தான் அந்த பதிவை போட்டாரா இல்லை வேறு காரணங்களா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.