திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை அனுஷ்கா ஷெட்டி அதுவும் வயது குறைந்த தொழிலதிபரை மணக்கிறாரா?

செய்திகள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா செட்டி. முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்த அனுஷ்கா செட்டி உடல் எடை கூடியதால் பட வாய்ப்பினை சமீபகாலமாக இ ழந்து வருகிறார்.

மேலும் இதற்கு காரணம் இஞ்சி இடுப்பழகி படத்தில் அளவுக்கு மீறிய உடல் எடையை ஏறியதால் தானாம். இதை கண்டு கொள்ளாமல் பாகுபலி 2 படத்தில் நடித்தும் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.

தற்போது 39 வயதை எட்டிய அனுஷ்காவிற்கு எப்போது திருமணம் என்று பல நடிகர்களுடன் வ தந்திகளாக பேசப்பட்டது. இந்நிலையில்  துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோலிவுட் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.