தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா…?

உணவே மருந்து

நாம் தினமும் காலையில் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிக நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை நம் உடல் செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் குடலியக்கம் மற்றும் மலச்சிக்கல் வயிறு சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும்.

அதுமட்டுமின்றி தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் இவை குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கிறது. ஆப்பிளை சாப்பிடும் போது தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் தோலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் ஆப்பிள் இரத்த சோகையை சரிசெய்கிறது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது தான் இதற்கு காரணம். இவற்றை குணப்படுத்த இரும்புச்சத்து உள்ள உணவுகளைக் எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிக நல்லது.

மேலும் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள் உணவுகளில் உள்ள  கார்போஹைட்ரேட்டுக்களை குறைக்கிறது. மேலும் ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் இதயத்தை ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் தோலில் இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கிறது. ஆப்பிளை சாப்பிடுவதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.