தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா…? சரியான அளவு குடிக்கவில்லை என்றால் உடலில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தெரியுமா…?

உணவே மருந்து

நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம் தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறான நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம். மேலும் மனித உடலானது 60% முதல் 70% சதவீதம் வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டது. நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உடலில் இருக்கும் இரத்தத்திலிருந்து தண்ணீர் 8 % வரை குறையும்.

உடலில் தண்ணீர் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

நம் உடலில் வாய் வறண்டு இருப்பதாக உணர்தல், வாய் வறண்டு போவது என்பது நமக்கு பொதுவான அறிகுறியாக இருக்கும். பொதுவாக நமக்கு வாய் வறண்டு போனால் நாம் உடனே குளிர்பானங்களை குடிப்பது வழக்கம். நாம் தண்ணீர் குடிப்பதன் மூலம் வாய் மற்றும் தொண்டையில் இருக்கும் மஸ்கஸ் எனும் சளிச்சவ்வுகளில் உராய்வை உண்டாக்கி வாயில் உமிழ் நீரை தக்க வைத்துக் கொள்கிறது.

மேலும் உடலில் தோல் உலர்ந்த தோற்றத்தை அளிக்கும். நம் உடலில் தோல் என்பது மிக பெரிய உறுப்பாகும் வறண்ட தோல் ஏற்படுவதற்கு காரணம் உடலில் நீர் இழப்பிற்கு ஆரம்ப அறிகுறியாகும். உடலில் தண்ணீர் இல்லை என்பதை உடலில் இருந்து வரும் வியர்வை குறைய ஆரம்பிக்கும். அப்பொழுது உடலில் இருந்து வியர்வை வழியாக வரும் கழிவுகள் உடலில் வறண்ட தோல் மற்றும் முகப்பருகளை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி உடலில் அதிக தாகம் எடுப்பதற்கு உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்பதை குறிக்கிறது. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் அதிகமாக தாகம் எடுக்கும் ஏனென்றால் மதுவை அருந்துவதால் உடலில் நீரின் அளவை அவை குறைக்கிறது.

மேலும் நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. நம் உடலுக்கு நாம் தண்ணீர் தேவையான அளவு குடிக்க வில்லை என்றால் கண்கள் வறண்டு போகும். வாய் மற்றும் தொண்டை பகுதிகள் மட்டுமின்றி நம் உடலில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். இது சம்மந்தமான நோய்களை சரிசெய்ய நாம் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான நோய்களும் நம்மை அண்டாது.