தான் கூட நடித்த நடிகையை க டத்திட்டு போ ய் திருமணம் செய்த ஒரே நடிகர் இவர் தான்.. இவர் பெரிய நடிகராச்சே!!

செய்திகள்

சினிமாவில் வைத்த ஒரு காட்சியைப் போலவே அந்த படத்தில் நடித்த நடிகையை க டத்திக் கொண்டு போய் ஒரு நடிகர் திருமணம் செய்ததை நினைக்கையில் அனைவருக்குமே ஆ ச்சரியமாகத் தான் இருக்கும். அப்படிப்பட்டவர் யார் என்பதை பார்க்கலாம்.

இரு துருவங்களை போல எப்போதுமே சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு கால கட்டங்களில் இரண்டு நடிகர்கள் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்வார்கள். அப்படி போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் தான் தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா.

அதனைத் தொடர்ந்து அடுத்த கால கட்டங்களில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் என வரிசை கட்டி கொண்டே செல்கிறது. மேலும் இரண்டு நடிகர்கள் நேரெதிராக இருந்தால் தான் சினிமா வியாபாரம் நன்றாக இருக்கும் என அப்படியே விட்டு விட்டனர்.

அப்படி இருதுருவ நடிகர்களில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் பி யு சின்னப்பா. அவர் பிரித்திவிராஜ் என்ற படத்தில் நடித்தபோது அவருக்கு ஜோடியாக சகுந்தலா என்ற நடிகை நடித்தார்.

அந்த படத்தில் தேரில் சகுந்தலாவை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. அதேபோல் நிஜவாழ்க்கையில் தன்னுடைய காரில் அவரைக் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டாராம் பி யு சின்னப்பா.

இந்த தகவலை டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் பி யு சின்னப்பா குதிரையில் ராஜா போல் வருவதைப் பார்க்கவே பல கோடி ரசிகர்கள் இருந்தார்கள் என பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.