தளபதியின் மாஸ்டர் பட டீஸரில் தல நடித்திருந்தால் எப்படி இருக்கும்..? இணையத்தை கலக்கும் நம்ம தல ரசிகனின் வைரல் வீடியோ!

வைரல் வீடீயோஸ்

மாஸ்டர் படத்தின் டீசர் காட்சியில் அஜித் நடித்த படத்தின் காட்சிகளை ஒட்டி மாஸ்டர் டீசர் 2.0 என ட்ரெண்ட் செய்துவருகின்றனர் அஜித் ரசிகர்கள்.இது செம்மையாக உள்ளதாக அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் கொரோனா காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்தநிலையில் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

டீசர் கட்சியில் விஜய் மிரட்டலாக நடித்திருப்பதால் மாஸ்டர் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் டீசர் காட்சியில் விஜய்க்கு பதில் அஜித் வந்தால் எப்படி இருக்கும் என்பது போல், மாஸ்டர் படத்தின் ஆடியோவை அபப்டியே வைத்து, விஜய் வரும் இடங்களில் மட்டும் அஜித்தின் பழைய காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி..