தற்போது பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொ ற்று உறுதி: பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் அ திர்ச்சி..!!

செய்திகள்

ஆந்திராவில் பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர், அதிகாரிகளிடையே அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிக்கு அனுப்பலாமா என பிற மாநில மக்களும் யோசித்து வருகின்றார்கள்.

இந்தியாவில் கொரோனா தொ ற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொ ற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொ ற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.  இந்தியாவில்  கடந்த  24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா பா திப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐந்து மாத காலம் பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் தொ ற்று குறையவில்லை. ஆனாலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் பள்ளிக்கு சந்தேகம் கேட்க பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக விஜயநகர் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் பங்கேற்ற பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் சென்றதாக தெரிகிறது.

பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொ ற்று பா திக்கப்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அனைத்து மு ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் எடுத்து இருந்த போதிலும் மாணவர்கள் வேறு இடங்களில் கொரோனா தொ ற்றால் பாதித்திருக்கலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

courtesy:Dailythanthi