தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை தயாரிப்பாளராக மாறுகிறாரார்.. யார் தெரியுமா?

செய்திகள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு சினிமாக்களில் தற்போது நடித்து வரும் நடிகைகளில் திறமையான நடிகை என்று பெயர் பெற்றவர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்க கீர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.