தமிழ் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்.. முதன் முறையாக வெளியான ரகசியம்.. யார் தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இதில் பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸில் இருந்து இதுவரை யாருக்கும் தெரியாத இருந்த விஷயம், பிக்பாஸின் குரல்.

ஆம் பிக்பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் துவங்கிய போது, தமிழ் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் சீரியல் நடிகர் அமித் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை மறுத்தார் அமித். நான் கன்னடத்தில் ஒரு முறை பிக் பாஸிற்கு குரல் கொடுத்துள்ளேன். ஆனால் தமிழில் இதுவரை நான் குரல் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.இந்நிலையில் பிக்பாஸாக குரல் கொடுப்பது யார் என்று முதல் முறையாக தெரியவந்துள்ளது.

இவரின் பெயர் சச்சிதானந்தம். இவர் பாலிவுட் நடிகர். ஆம் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார் மற்றும் குரல் வல்லுனராக இருக்கிறாராம்.

இதோ அவரின் புகைப்படங்கள்..