மாடலிங் படித்து மாடலாக மும்பையில் வளம் வந்த நடிகை அஷ்ரிதா ஷெட்டி. இவர் தமிழில் உதயம் NH4, ஒரு கன்னியும் மூணு களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின் படங்கள் கிடைக்காமல் இருந்தார்.
பிறகு எங்கே சென்றாறென்று தேடி வந்த நிலையில், தற்போது ஒரு தகவலால் ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இணைந்தவர் மனிஷ் பாண்டே. இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்ந்து பிரபலமானதால் இந்திய அணியில் இடம் பெற்றது.
இந்நிலையில் மனிஷ் பாண்டேவும் நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். இதை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்யப் போவதாக தகவல் க சிந்து வருகிறது.
மேலும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.