தமிழ் சினிமாவில் இடுப்பழகியாக கொடிக்கட்டி பறந்த நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு வயதாகி விட்டதா.? வயதான தோற்றத்தில் புகைப்படம் பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழில் விஜய் மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிம்ரன்.தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் கூடிய விரைவிலேயே தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். இதனாலேயே விஜய் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.முடியெல்லாம் நரைத்து வயதான தோற்றத்தில் சிம்ரன்.!

ஒன்ஸ்மோர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் ,ஜோடி , பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் திரை அரங்குகளில் சக்கை போடு போட்டன. நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது நரை முடியை வெளியே காட்ட மாட்டார்கள். கலரிங் செய்வார்களே தவிர அப்படியே தலைமுடியை விட மாட்டார்கள். ஆனால் தைரியமாக தனது சால்ட் அன் பெப்பர் லுக்கில் படத்திலேயே நடித்தவர் அஜித்.

அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பலர் அப்படியே வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். இப்போது பல பிரபலங்கள் தைரியமாக சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை சிம்ரனும் தனது சால்ட் அன் பெப்பர் லுக் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இது, வயது ஆகிவிட்டது, மீண்டும் பழைய லுக்கிற்கு வாருங்கள் என சிலர் புலம்பி வருகிறார்கள்..