தமிழக அரசு விருது பெற்றதால் அனைவருக்கும் விருந்து வைத்த தாசில்தார்… அதுவே வினையாக வந்த பகீர் உத்தரவு!

செய்திகள்

தற்போது நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரிடம் விருது பெற்றதை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடிய தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கொரோனா பேரிடரில் சிறப்பாக பணியாற்றியதற்காக தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கும் பட்சத்தில் அனைவரையும் கூப்பிட்டு இது கொரோனா பரப்பும் விதமாக அமைந்ததால் இவாறு செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் தாசில்தாராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சரின் கையால் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு விருது பெற்றார்.

அவர் விருது பெற்றதை கொண்டாடும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற வட்டாட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை பணியிடை மாற்றம் செய்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.