பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே மிகவும் பிரலம் அடைந்தது. சீரியல்கள் மட்டுமின்றி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளும் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் அதில் பணி புரியும் அனைவருக்குமே விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் என்ற பெயரில் பிரபல விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு வருடம் தோறும் விருதுகளை வழங்கி வருகின்றனர்.
ஆண்டு தோறும் விஜய் டிவி நிகழ்ச்சி பிரபலங்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்களுக்கு விருதுகளை வாங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நடந்துள்ள விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் 2021 நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது, மேலும் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் நடிகை தீபாவிற்கு விருதை அளிக்காததால் ம னம் வ ருந்தியுள்ளார். நடிகை தீபா தனக்கு விருதை அளித்திருந்தால் அவரின் அம்மாவின் போட்டோவை திரையில் காண்பிப்பதாக நினைத்ததாகவும், ஆனால் விருதை எனக்கு கொடுக்கவில்லை என வருந்தியுள்ளார்.