சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகநாடுகளையும் உலுக்கி எடுத்துவருகிறது.சீனாக்காரர்கள் சாப்பிட்டதற்கு இன்று உலகமே அடிக்கடி தன் கைகளை கழுவிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.
சீனாவில் தொடங்கிய கரோனா இந்தியாவையும் படுத்தி எடுத்துவருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனா வைரசால் ஆட்டம் கண்டுள்ளது. இந்த சூழலில் உலகமே சீனாவை நோக்கி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சீனாவில் வைரஸ் பரவலுக்கு அந்நாட்டு மக்களின் உணவுக்கலாச்சாரமே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறது. சீனாவில் பாம்பு, பூச்சி, தவளை என சகல ஜீவராசிகளையும் அந்த மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் நம்மூரில் கத்திரிக்காய், வெண்டைக்காய் வியாபாரம் போல் ஒருவண்டி நிறைய தவளையை கொண்டுவருகிறார்கள். அது உயிருடன் இருக்கும்போதே அதை கத்திரி, வெண்டைய பார்த்து எடுப்பது போல் சீனர்கள் தேர்வு செய்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவிவருகின்றது.