ஜூலை மாத ராசி பலன் 2020: பணவருகையால் திக்கு முக்காட போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

ஆன்மிகம்

ஜூலை மாதம் சூரியன் மிதுனம் ராசியில் பாதி நாட்களும், கடகம் ராசியில் 15 நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் இருந்த கிரகங்களின் கூட்டணி பிரிகிறது.

கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனம் ராசியில் புதன், ராகு, தனுசு ராசியில் கேது, குரு, மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும்.

எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும்.

பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

ரிஷபம்

சமயத்திற்கு தகுந்தாற்போல் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் ரிஷப ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. குருவின் பார்வையால் ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும்.

ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, பண நிலுவை வந்து சேர தாமதமாகலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மனக்கவலை அகலும். கலைத்துறையினருக்கு காரியத் தடைகள் நீங்கும். அரசியல்துறையினருக்கு திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்: விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.

மிதுனம்

எந்த பிரச்னைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அயனசயன போக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

வீண்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் இருந்த தாமதம் நீங்கி வேகம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும்.

சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பெண்கள் யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாறும். கலைத்துறையினர் யாரிடமும் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: திருமண திருக்கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

கடகம்

அனைவரிடமும் அனுசரித்துச் செல்லும் குணமுடைய கடக ராசியினரே! இந்த காலகட்டத்தில் கிரகநிலை சூழ்நிலையால் ஓரளவுக்கு நன்மை பெறப் போகிறீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும்.

வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும்.

தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். கலைத்துறையினருக்கு பெருமை ஏற்படும். அரசியல்துறையினருக்கு உங்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.

சிம்மம்

என் வழி தனி வழி என்று செயல்படும் சிம்ம ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ராகுவுடன் லாபஸ்தானத்தில் இருக்கிறார்.

பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். சுபகாரியங்கள் சம்மந்தமான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனதில் மகிழ்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். அரசியல்துறையினருக்கு குழப்பங்கள் நீங்கும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்.

கன்னி

ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய கன்னி ராசியினரே! இந்த காலகட்டத்தில் பணவரவு வரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை.

ஆவணங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அலுவலகத்தில் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ நிலையினை எடுக்காதீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரலாம்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.

கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.

துலாம்

எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் மிகுந்த துலா ராசியினரே! நீங்கள் நீதிக்கு தலைவணங்குபவர். இந்த காலகட்டத்தில் கிரக அமைப்பு முன்கோபத்தைத் தந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு அனைவரின் ஆதரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கருத்து வேற்றுமை ஏற்படும். அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி.

விருச்சிகம்

அமைதியாக இருக்கும் அதேநேரத்தில் எதிர்ப்புகள் வந்தால் எரிமலையாகி விடும் விருச்சிக ராசியினரே! இந்த காலகட்டம் எதிலும் பயம் உண்டாகும்.

செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்னை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்களுக்கு சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். அரசியல்துறையினருக்கு நீங்கள் ஏற்பாடு செய்த காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

பரிகாரம்: மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை சமர்ப்பித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

தனுசு

ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க தெரிந்த தனுசு ராசியினரே! இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது.

பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.

கணவன் – மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு முட்டுகட்டைகள் அகலும். அரசியல்துறையினருக்கு கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

பரிகாரம்: சித்தர்கள் சந்நதிக்குச் சென்று வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள்.

மகரம்

திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்காத மகர ராசியினரே! காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாகப் புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்னைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும்.

பெண்களுக்கு பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து செய்வது நன்மை தரும். கலைத்துறையினர் வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனக்கஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்.

கும்பம்

உழைப்புக்கு பலன் உண்டு என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லாத கும்ப ராசியினரே! நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம்.

பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள்.

விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு மனோதைரியம் கூடும். கலைத்துறையினருக்கு சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு செல்வம் சேரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வணங்குவது மனோ தைரியத்தைத் தரும். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மீனம்

எந்த சூழ்நிலையையும் அனுசரித்துச் செல்லும் திறமை உடைய மீன ராசியினரே! இந்த காலகட்டத்தில் வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும்.

அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும்.

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.

பெண்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். கலைத்துறையினருக்கு லாபம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.