ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இதில் நடித்து வருபவர்கள் தான் நடிகை ரேஷ்மா மற்றும் நடிகர் மதன். இவர்கள் இருவரும் காதலித்து வருவதை சமீபத்தில் சமூக வலைத் தளங்களில் அறிவித்திருந்தனர்.
மேலும் இந்நிலையில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஜீ தமிழில் கொண்டாட்டமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பேசிய நடிகை ரேஷ்மா, தனக்கு மதன் இதுவரை காதல் ப்ரபோஸ் செய்யவில்லை என்று கூறினார்.
அதற்கு அந்த நிகழ்ச்சியிலேயே ரேஷ்மாவிற்கு, வெக்கத்துடன் ப்ரபோஸ் செய்கிறார் மதன்.