செல்வ வளத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்.. வீட்டில் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

ஆன்மிகம்

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும்.

ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால், எந்த வீட்டில் பச்சை கற்பூரம் இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் விலகி நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பச்சை கற்பூரத்தை நம் வீட்டில் ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் கண் திருஷ்டி, எதிர்மறை சக்திகள், துர்சக்திகள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்.

மேலும், பணம் எப்பொழுதும் வீட்டில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மஞ்சள் துணியை சதுரமாக வெட்டி அதில் பச்சை கற்பூரத்தை முடிச்சு போட்டு குபேர மூலையில் வைத்து தீப தூபங்களை காட்டி வந்தால் உங்கள் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வைத்தால் பூஜை அறையில் உள்ள தெய்வீக சக்தி அதிகரிக்கும்.பச்சை கற்பூரத்தின் நறுமணம் மகாலட்சுமியை ஈர்க்கும் சக்தி கொண்டது.

நீங்கள் பணம் வைக்கும் இடமான பீரோ, பர்ஸ், பணப்பெட்டி போன்ற இடங்களில் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

வீட்டில் சுபகாரியங்களின் போது செய்யும் இனிப்பு பண்டங்களில் பச்சை கற்பூரத்தை சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு பச்சை கற்பூரத்தை உபயோகித்து வந்தால் உங்களின் வாழ்க்கை செல்வம வளம் நிறைந்து மகிழ்ச்சியாக அமையும்.