பிரபலமான உச்ச நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் ரிலீசாக இன்னும் பல மாதங்கள் ஆகலாம். ஆனால் பிரபாஸை ஆதிபுருஷாக பார்க்க விரும்பும் ரசிகர்களின் உற்சாகம் கரை கடந்துவிட்டது.
பிரபலமான உச்ச நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் ரிலீசாக இன்னும் பல மாதங்கள் ஆகலாம். ஆனால் பிரபாஸை ஆதிபுருஷாக பார்க்க விரும்பும் ரசிகர்களின் உற்சாகம் கரை கடந்துவிட்டது.
கரை கடந்த ஆசை, போஸ்டராக வெளியாகி இணையத்தில் சக்கை போடு போடுகிறது. #Adipurush ஆன்லைனில் பிரபலமடையத் தொடங்கியதைப் பார்த்து ஆதிபுருஷ் திரைப்பட இயக்குநரே அசந்து போய்விட்டார்.
My First Edit On #Prabhas‘s #Adipurush ❤️
How’s It Darlings??! pic.twitter.com/dtyDfJHOf9
— Prabhas Central (@PrabhasCentral) November 9, 2020
பிரம்மாண்டமான பிரபாஸின் திரைப்படத்திற்கு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எவ்வளவு பிரபலடையுமோ, அந்த அளவுக்கு ரசிகர்களின் உத்தேச போஸ்டர் பிரபலமாகிவிட்டது. ஆதிபுருஷ் திரைப்பட இயக்குனர் ஓம் ரவுத் (Om Raut) இந்த பதிவை மறு ட்வீட் செய்தார். “இது பிரமிக்க வைக்கிறது. உங்களுக்கு அதிக சக்தி @PrabhasCentral” என்று எழுதினார்.ஆதிபுருஷ் திரைப்படத்தில் சைஃப் அலிகான் (Saif Ali Khan) வில்லனாக நடிக்கிறார்.
திரைப்படம் தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் பகிர்ந்த பிரபாஸ், “7000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன் இருந்தான்!
#Adipurush #SaifAliKhan @omraut @bhushankumar @vfxwaala @rajeshnair29 @tseriesfilms @retrophiles1 @tseries.official என்று பின்னூட்டம் எழுதியுள்ளார்.சைஃப் அலி கானுடன் பணிபுரிய பிரபாஸ் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.
“சைஃப் அலி கானுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஒரு சிறந்த நடிகருடன் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார். சைஃப் உற்சாகமாக கூறினார், “ஓமி தாதாவுடன் மீண்டும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! அவருக்கு பரந்துபட்ட பார்வை மற்றும் தொழில்நுட்ப அறிவு உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
அவர் சினிமாவின் வரம்புகளுக்கு அப்பால் என்னை அழைத்துச் சென்றுள்ளார் அவர் Tanhaji திரைப்படத்தை எடுத்த விதம் அதை நிரூபித்துவிட்டது. ஆதிபுருஷ்! இது ஒரு தனித்துவமான சினிமா, அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! வலிமைமிக்க பிரபாஸுடன் வாட்போர் புரியவும், வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!
This is stunning. More power to you @PrabhasCentral.#Adipurush #Prabhas https://t.co/8Gqzy5cQBO
— Om Raut (@omraut) November 9, 2020
ஆதிபுருஷின் இயக்குநர் என்ன சொல்கிறார் தெரியுமா? “எங்கள் காவியத்திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிலும் குறிப்பாக வலுவான வில்லனாக நடிக்க எங்களுக்கு ஒரு சிறந்த நடிகர் தேவைப்பட்டார். இந்த சக்திவாய்ந்த பாத்திரத்தை செய்வதற்கு மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான சைஃப் அலிகானை விட சிறந்தவர் யார் இருக்க முடியும்?
தனிப்பட்ட முறையில், அவருடன் நான் வேலை செய்யும் ஒவ்வொரு நாளும் அவரது திறமையைக் கண்டு பிரமித்துப் போவேன். பிரபாஸ், சைஃப் அலி கான் என்ற இரண்டு காவிய நாயகர்களுடன், காவிய திரைப்படத்தில் பணியாற்றும் அற்புதமான பயணத்திற்காக காத்திருக்கிறேன்”.
soruce :zee news.india