சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது..! இவர் இப்படிப்பட்டவரா.? வெளியான அதிர்ச்சி காரணம்.!

செய்திகள்

தனது அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய புகாரில், நடிகர் ஷாம் உள்பட 13 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாம். இவருக்கு சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டபோது நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடியது உருத்திசெய்யப்பட்டது. இதனை அடுத்து நடிகர் ஷாம் மற்றும் அவருடன் சீட்டு விளையாடிய மற்ற நபர்களையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் நடைபெற்றவிசாரணையில் தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் பணம் வைத்து சீட்டு விளையாடிவந்ததும், நடிகர் ஷாம் அந்த வீட்டை ஒரு சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.