சூப்பர் ஹிட் படமான “எங்கேயும் எப்போதும்” பட நடிகரை நினைவிருக்கிறதா? இவரா இது என ஆச்சர்யப்படுத்திய புகைப்படம்!

செய்திகள்

தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் படத்தில் அனன்யாவின் காதலராக நடித்தவர் ஷர்வானந்த்.இவர் சேரன் இயக்கத்தில் ஜேஜே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஜெயிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உள்ளார்.

சபரிமலை சீசன் தொடங்கி விட்டதால் அவரும் அவரது நெருங்கிய வட்டாரங்களும் மாலை அணிந்து விரதம் இருக்கிறார்களாம். ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரை செல்வார்களாம்.நல்ல செயல் தானே..

இதற்காக பிரபலம் என நினைத்துக் கொள்ளாமல் அவர் அனைவரையும் போல படி பூஜைகள், அன்னதானம் எல்லாம் செய்து முறைப்படி விரதம் இருந்தாராம்.கடவுள் முன் அனைவரும் சமமே என்பதற்கு இது ஒரு சான்று.