சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன அஜித் மனைவி ஷாலினி!! காரணம் என்ன தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முதலில் அஜீத் மனைவி ஷாலினி நடிக்க இருப்பதாக இருந்து பின்னர் விலகிய செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகியுள்ளது.

ரஜினி கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி என்றாலே ரசிகர்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் இவர்களது கூட்டணியில் வெளிவரும் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும். முத்து படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 1999ஆம் ஆண்டு படையப்பா எனும் படத்தில் இருவரும் இணைந்தனர்.

படையப்பா படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. படையப்பா படத்தால் ஒரு ஆட்சியே மாறியது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது.

ஆனால் படையப்பா படத்தில் கே எஸ் ரவிகுமார் நினைத்தபடி முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்க முடியாமல் போனதாக பின்னர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் மீனா மற்றும் நக்மா ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டு கடைசியாக அது ரம்யா கிருஷ்ணனை வந்து சேர்ந்தது.

அதே போல் தான் படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கச்சியாக நடித்த சித்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தல அஜித் மனைவி ஷாலினி தானாம்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இளம் கதாநாயகியாக கலக்கியவர் நடிகை ஷாலினி. முதலில் ரஜினியின் தங்கையாக அஜீத் மனைவி ஷாலினி நடிக்க வைக்க நினைத்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.