சும்மா கெத்தா!! 3 வருஷத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா! அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா! செம சான்ஸ்தான்!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

பின்னர் ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  பின்னர் கடைசியாக அவர்  2017ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார்.  பின்னர் 3 வருஷமாக அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் ஸ்ரீ திவ்யா தற்போது நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை பாணாகாத்தாடி படத்தை இயக்கிய  இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். மேலும் எல்.சிந்தன், ராஜேஷ்குமார் இருவரும் தயாரிக்கிறார்கள். இதில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு  சென்னை, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.