சீரியல் நடிகையை திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றிய முன்னணி பிரபலம்!! வெளிவந்த அ திர்ச்சி தகவல் !!

செய்திகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான். இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தன் மூலம் இவர் சன் டிவிக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் மிக க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்நிலையில் பிரியங்கா நல்கரி கடந்த 2019ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் எல்லாத்துக்கும் சாரி எப்படா வருவ உனக்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டா என்ற ஒரு பீலிங்கான பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்த வகையில் இதனைப் பற்றி பிரியங்காவிடம் ரசிகர்கள் கேட்டதற்கு இவர் தெலுங்கில் சீரியலில் நடித்து வரும் ராகுல் என்பவரை காதலித்து 2018ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களாம்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து ராகுல் ஹைதராபாத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்றாராம். மலேசியா சென்ற பிறகு பிரியங்காவிடம் ராகுல் பேசவே இல்லையாம் எந்த தொடர்பும் இல்லாத காரணத்தினால் பிரியங்கா ஒரு நாள் பேச முயன்றுள்ளார் எதற்கும் பயனில்லாமல் போய் விட்டதாம்.

இந்நிலையில் பிரியங்கா இனிமேல் எனக்கும் ராகுலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவரவர் வாழ்க்கை அவரவர் பார்த்துக் கொண்டால் போதும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிரியங்கா மற்றும் ராகுல் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.