தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், பு.ல.ன்வி.சா.ர.ணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். நடிகை லலிதாகுமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது.
பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர். பின் 2004 ஆம் ஆண்டு சித்து கா.ல.மா.னார். அதன் பின் லலிதா குமாரிக்கும்,பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு வி.வா.க.ர.த்.து பெற்று பிரிந்தனர். பின் நடிகை லலிதா குமாரி அவர்கள் சினிமா விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், சமீபத்தில் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை பார்த்து அனைவரும் நடிகை லலிதா குமாரியா இது, என்று கேட்கும் அளவிற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.
இந்நிலையில் நடிகை லலிதா குமாரி அவர்கள் கடந்த ஆண்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் அவர்கள் படத்தில் நீங்கள் கவுண்டமணி தங்கையாக கருப்பு நிற பெயின்ட் அடித்துக்கொண்டு ஒரு காட்சியில் நடித்து இருப்பீர்கள்
அந்த படத்தின் அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு நடிகை லலிதா குமாரி அவர்கள் கூறியது, எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் நான் நடித்து இருந்தேன். அப்ப என்னிடம் வந்து கருப்பு மேக்கப் பண்ணி கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அப்ப நான் கொஞ்சம் கருப்பா தான் இருந்தேன். ஏற்கனவே கருப்பா இருக்கிற என்னை கருப்பு பொண்ணு மாதிரி ஒரு சீன்ல நடிக்க சொன்னாங்க. அந்த சீன்ல நான் நடிக்கவே மாட்டேன் என்று அழுதேன்.
அந்த சீன்ல என்னை கருப்பா காட்டுறீங்க, நான் அசிங்கமா இருப்பேன், நான் பண்ணமாட்டேன் என்று பயங்கரமாக அழ ஆரம்பிச்சுட்டேன். அப்ப எங்களோடு இயக்குனர் வந்து என்னிடம் நீ விஜயகுமாரி அம்மாவோட கருமைநிற கண்ணா என்ற ஒரு பாட்டு கேட்டு இருக்கியா என்று சொன்னார். நானும் கேட்டு இருக்கேன் அது ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். அதில் எவ்வளவு அழகாக இருந்தாங்க. அதே மாதிரி தான் நான் இந்த படத்தில் அழகாக காண்பிக்கிறேன் என்று சொன்னார்கள்.
கருப்பு என்று சொல்லி ரொம்ப அசிங்கமா காட்டுவார்களே என்று ப யந்துட்டு இருந்த என்னை சமாதானப்படுத்தினார்கள். அதுக்கு பிறகு தான் இந்த படத்தில் நான் நடித்தேன். தற்போது கூட இந்த படத்தின் காட்சியை வைத்து நீங்கள் தானே அது என்று கேட்பார்கள். எந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன்னு என்று சொன்னேனோ அந்த காட்சி தான் மக்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது என்று கூறினார்.