குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் பிற்காலத்தில் வளர்ந்து திரைத்துறையில் இயங்குகிறார்கள். அதில் சிலர் ஜொலிக்கிறார்கள். சிலரோ ஜொலிப்பதில்லை. பாண்டியராஜனோடு ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஆனால் அவர் ஹீரோவாக சோபிக்க முடியவில்லை. அதேபோல் தேவர் மகனில் நடித்த நீலிமா இப்போதும் சீரியல், திரைப்படம் என கலக்குகிறார். அந்தவகையில் இதுவும் ஒரு குழந்தை நட்சத்திரத்தின் கதைதான்!
சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயாசர்மா. குழந்தையாக நாம் பார்த்த ஷ்ரேயா சர்மா இப்போது வளர்ந்து விட்டார். தெலுங்கில் ‘காயகுடு’ என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். படமும் ஓரளவுக்கு ஓடியது.
தொடர்ந்து பிரபல நடிகர் நாகர்ஜூனா தயாரிபில் ‘நிரமலா கான்வெண்ட்’ என்னும் படத்திலும் நடித்தார். இதனால் தெலுங்குப்பட உலகில் அதிக ரசிகர்களையும் பெற்றார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கவர்ச்சிப்படங்களை போட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இதைப்பார்த்த பலரும், ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் குழந்தைநட்சத்திரமாக பார்த்த ஸ்ரேயா சர்மாவா இது? என கமெண்டியுள்ளனர்.