சிம்பு மாதிரி இருக்கும் இந்த சுட்டி குழந்தை யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! கியூட் வீடியோ இதோ!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை பெருமளவில்  உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். நடிகர் சிம்பு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார். மேலும் சில ஆண்டுகளாக சமூக வலைதள பக்கமே தலை காட்டாமல் இருந்த சிம்பு சிம்பு தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது தங்கை இலக்கியாவின் மகனை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியுள்ளார். மேலும் தனது மருமகனுடன் காரில் ஜாலியாகவும் சென்றுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலான நிலையில் அதனை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.