சின்னத்திரை சீரியல் நடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ.. நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..!!

செய்திகள்

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் TRPயில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று தான் சத்யா. இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடிகை அயீஷா மற்றும் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு நடித்து வருகிறார்கள்.

ஜீ தமிழில் 3ஆம் ஆண்டில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான முன்னோட்டமாக மிகவும் வித்தியாசமான முறையில், பிக்பாஸ் போல் ஜீ தமிழ் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை ஒரு வீட்டிற்குள் அனுப்பி 3 நாட்கள் தங்க வைத்துள்ளார்கள்.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என இதுவரை பல ப்ரோமோக்கள் வெளியாகின. இதில் வெளியாகிய ஒரு ப்ரோமோவில், ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் ” உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நீ செய்யும் விஷயங்கள் மிகவும் அழகாக இருக்கிறது, நீ யோசனை செய்து பதில் சொல்ல ” என கூறுகிறார்.

இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார். இதனால் இவருக்கும் இடையே காதல் பலர வாய்ப்புகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர்.