சாலை ஓரத்தில் கொட்டிக்கிடந்த தங்கம்? குவிந்த பொதுமக்கள்! ஓசூரில் பரபரப்பு!

செய்திகள்

ஓசூர் அருகே சாலை ஓரமாக தங்க துகள்கள் கிடைப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதியில் மக்கள் கூட்டமாக கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரத்தில் தங்கம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் அமைந்துள்ள காவல் குடியிருப்புக்கு எதிரே உள்ள முட்புதரில் தங்கம் கிடைப்பதாக தகவல் பரவியுள்ளது. இதனை அடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கிய சிலருக்கு சிறிய அளவிலான தங்க துகள்கள் கிடைத்துள்ளது.

முண்டியடித்து கூட்டமாக கூடிய மக்கள்:

மேலும் அந்த பகுதியில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட, இந்த தகவல் அக்கம் பக்கத்துக்கு பகுதிகளுக்கும் தீயாக பரவ, அந்த பகுதியில் கூட்டம்  கூடிவிட்டது. மேலும்  நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதை தடுக்கும் விதமாக போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.