சப்பாத்தி தயாரிக்கும் போது மாவில் எச்சில் துப்பிய நபர்…! திருமண நிகழ்ச்சியில் அதிர வைத்த வாலிபரின் சர்ச்சைக்குரிய காட்சி…!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கேட்டரிங் நபர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்புவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன்படி திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் சப்பாத்தி மாவை தயார் செய்து வருகிறார்.

இவர் சப்பாத்தி மாவை உருட்டிக்கொண்டிருக்கும் போது, யாரும் பார்க்காத நேரத்தில் அதன் நடுவில் எச்சில் துப்புகிறார். இதனை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் பரவும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.