சத்யா சீரியலில் நடிக்கும் நடிகையுடன் ஈழத்து தர்ஷன்… வைரலாகி வரும் புகைப்படங்கள்…!!

செய்திகள்

ஈழத்து தர்ஷன் தற்போது சீரியல் நடிகையுடன் ஜோடி போட்டு ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

சத்யா தொடரில் நடித்து வரும் ஆயிஷாவுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை சித் ஸ்ரீராம் தான் பாடியிருக்கிறார்.

இதுபோக தர்ஷன் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

தர்சன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார். நடிக்கும் படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதேவேளை, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் நடைபெறும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.