சத்தமே இல்லாமல் நடந்த குக் வித் கோமாளி பிரபலத்தின் திருமணம்! மணப்பெண் இவர்தானா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

செய்திகள்

பிரபல தொலைக்காட்சிகளில் சில சீரியல்களில் நடித்திருப்பவர் சாய்சக்தி. இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானார்.

இவருக்கு சில காலங்களாக  வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் மிகுந்த மன அ ழுத்தத்தில் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது சாய் சக்திக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

சாய் சக்தி மீஞ்சூரை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா  என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சாய்சக்தியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.