கோவிலில் மணி ஏன் அடிக்கிறார்கள்… எதற்கு தெரியுமா? அறிவியலில் ஒளிந்திருக்கும் உண்மை…!!

ஆன்மிகம்

கோவிலில் மணி எதற்கு அடிக்கிறோம் என்று தெரியுமா? நாம் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு கோவில் மணியை எதற்காக அடிக்கிறோம் என்று தெரியாது.

நாம் கோவிலில் மணி அடிக்கும் ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது. என முன்னோர்கள் கூறுகிறார்கள். கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் பொருளாக மணி ஓசைக்கு பின் ஒரு அறிவியல் நுண்ணறிவு உள்ளது. சிலர் கோவில் மணி அடித்து விட்டு பிறகு கடவுளை வணங்குவதால் அவர்களின் வேண்டுதலை கடவுள் கேட்பார். என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.

ஆகையால் சாஸ்திரங்களின் படி கோவில் மணியிலிருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமின்றி கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. என்று அறிவியலில் கூறப்படுகிறது.

மேலும் கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஓசையில் ஒரு தனித்துவம் உள்ளது. இதற்கு காரணம் கோவில் மணிகளில் துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் இதற்கு காரணமாக உள்ளது. கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை சமநிலைக்கு கொண்டு வருகிறது.

கோவில் மணியை அடிப்பதால் அதிலிருந்து வெளிவரும் சத்தம் உடலில் ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி அவை உடலுக்கும், மனதிற்கும் நிம்மதியை அளிக்கிறது.