கோடி கோடியாய் சம்பாதித்தாலும் இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் முன்னணி நடிகர்! யார் அந்த நடிகர்.. காரணம் என்ன தெரியுமா?

செய்திகள்

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பாலிவுட் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்ற ஹிருத்திக் ரோஷனின் திரையுலகில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம் கஹோ நா.. பியார் ஹே.

2000ம் ஆண்டுகளில் வசூல் ரீதியாக சாதனை படைத்த இந்த படம், ஹிருத்திக் ரோஷனுக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து க்ரிஷ், தூம் 2, ஜோதா அக்பர் என சிறந்த படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வந்தார்.

என்ன தான் கோடிகளில் புரண்டாலும், ஹிருத்திக் ரோஷன் வசிப்பது என்னவோ வாடகை வீட்டில் தானாம். பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பரமான Juhu’s Shanti Road பகுதியில் வசிக்கிறாராம்.

மாத வாடகை மட்டும் ரூ.8.5 லட்சம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இவருக்கு பக்கத்து  வீட்டாராக பிரபல நடிகரான அக்ஷய் குமார் வசித்து வருகிறாராம்.