கோடியை கொட்டி கொடுத்தாலும் அவருக்கு ஊறுகாய் ஆகாமாட்டேன்னு மூஞ்சில் அடித்தபடி சொன்ன அனுஷ்கா..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகரின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா மறுத்துள்ளார். தற்போது சினிமாவில் கதைகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படத்தின் அடுத்த பாகம் எடுத்துக் கொண்டே போகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் ஒரு சிலர்கள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக ஹிட்டடித்த திரைப்படமாக தேர்ந்தெடுத்து அதை ரீமேக் செய்தும் வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தை தற்போது ரீமேக் செய்ய போகிறார்களாம்.

இவ்வாறு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை 37 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் அவர்கள் நடிக்கப்போகிறாராம். இத திரைப்படமானது அந்த காலத்திலேயே ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் பாக்யராஜ்  தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்துக் கட்டியது.

தற்போது இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து ஜே எஸ் பி நிறுவனமானது வாங்கியுள்ளது. மறுபடியும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாக்யராஜ் தான் இயக்கப் போகிறாராம். இதில் கதாநாயகனாக சசிகுமாரும் கதாநாயகிகளாக பிரபல நடிகை அனுஷ்காவை கேட்டுள்ளார்கள்.

ஆனால் நடிகை அனுஷ்கா எனக்கு கோடி ரூபாய் நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் சரி இந்த திரைப் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம். அதன்பிறகு பிரபல நடிகை மேகா ஆகாஷ் என்பவரை ஹீரோயினாக தேர்ந்தெடுத்துள்ளார்கலாம். அனுஷ்கா தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.