கொரோனாவின் முக்கிய அறிகுறி: இந்த சளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை, துளசி சூப்.. எளிதில் தயாரிப்பது எப்படி?

உணவே மருந்து

கொரோனா மக்கள் மத்தியில் ஒரு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு மிக முக்கிய அறிகுறியான சளி இருமல் காய்ச்சல் உள்ளது,நமக்கு பெரும்பாலும் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நடக்கக்கூடிய சாதாரண நிகழ்வு.

கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக திகழும் சளி, இருமலை க ட்டுப்படுத்தும் வெற்றிலை துளசி.இந்த வெற்றிலை மற்றும் துளசி மிக பெரிய வரப்பிசாதம்.அது பல்வேறு நோ ய்களை கு ணபடுத்தும் என்பது நாம் அறிந்ததே.

இதன் மூலம் நாம் எப்படி சூப் செய்து நம் உடலில் நோ ய் எ திர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு

வெற்றிலை – 6 இலைகள்

தூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவு

புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

தக்காளி – ஒன்று

சிவப்பு மிளகாய் – ஒன்று

உப்பு – தேவையான அளவு

செய்முறை

*துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

*நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.