குருவினால் வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் பேராபத்து! மிகவும் ஜாக்கிரதை…! ராகுவிடம் சிக்க போவது யார்?

ஆன்மிகம்

ஆகஸ்ட் மாதம் சூரியன் கடகம் ராசியில் பாதி நாட்களும், சிம்மம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.இந்த சூரியனுடன் கூடவே புதன் பயணக்கிறார். ஆகஸ்ட் மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது.

2020ஆம் ஆண்டைப் பொருத்தவரை எல்லோரும் உயிரோடு இருப்பதே லாபம்தான் என்றாலும் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

வீரமும் விவேகமும் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, எத்தனை தடைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் மறுவேலை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசி நாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் 12ஆம் வீட்டிலும், மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்கிறார். சுக்கிரன், ராகு மூன்றாம் வீட்டில் இணைந்துள்ளனர். சூரியன் இந்த மாதம் 4 மற்றும் 5ஆம் வீட்டில் பயணிக்கிறார்.

புதன் நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டிற்கும் பயணம் செய்கிறார். சனி பத்தாம் வீட்டிலும், குரு கேது ஒன்பதாம் வீட்டிலும் பயணிக்கின்றனர். இந்த மாதம் புத்திர பாக்கியம் தேடி வரும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். உங்க பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானம், பாக்ய ஸ்தானம் இந்த மாதம் நன்றாக இருக்கிறது.

குருவின் பார்வை உங்க ராசியின் மீதும், முயற்சி ஸ்தானம் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் உங்களுக்கு இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி வக்ரமடைந்திருப்பதால் தொழில் ரீதியாக சில நன்மைகள் நடைபெறும். இதுநாள் வரை இழுபறியாக தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடி வரும். தடைகளை தாண்டி முன்னேற்றம்

வரும். மாத பிற்பகுதியில் 16ஆம் தேதிக்கு மேல் ராசிநாதன் செவ்வாய் உங்க ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்கிறார். சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். 1ஆம் வீடு 5ஆம் வீடு 9ஆம் வீடு அற்புதமாக அமைந்துள்ளது. முக்கிய அரச கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன.

வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பணம் நன்றாக இருக்கும். வக்ரமடைந்த குரு ஒன்பதாம் வீட்டில் கேது உடன் அமர்ந்து செவ்வாய், சூரியன் மீது விழுவது அற்புதமாகும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி தேடி வரும். குருவின் பார்வையால் சாதகம் கிடைக்கும். உங்க தொழில் காரகன் சனி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். உங்களுடைய புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

தொழில் முதலீடுகளை தைரியமாக செய்யலாம். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் கொஞ்சம் ஒத்திப்போடலாம். கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் மேஷம் ராசிக்கு சாதகங்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமையும்.

ரிஷபம்

அன்பும் அக்கறையும் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு உடன் பயணிக்கிறார். செவ்வாய் லாப ஸ்தானத்திலும் மாத பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திற்கும் வருகிறார். சூரியன், புதன் மூன்று மற்றும் நான்காம் வீட்டிலும் குரு கேது எட்டாம் வீட்டிலும் சனி ஒன்பதாம் வீட்டிலும் பயணிக்கின்றனர். ரிஷபம் ராசிக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடைபெறும்.புதிய வேலை விசயமாக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ராகு உடன் சுக்கிரன் இணைந்து பயணிப்பதால் நிறைய பணவரவு, செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை விசயமாக நிறைய திட்டமிடலாம். சூரியன் இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் நான்காம் வீட்டிலும் பயணிக்கிறார்.

புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். மாத பிற்பகுதியில் சுக ஸ்தானாதிபதி சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது ரொம்ப நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் சொத்து வீடு வண்டி வாகனம் வாங்கலாம். திருமணம் சுப காரிய முயற்சிக்கான பேச்சுவார்த்தை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் நன்றாக இருக்கிறது.

பிடித்த படிப்பை பிடித்த கல்லூரியில் சேர ஆன்லைனில் அப்ளை செய்யலாம். செவ்வாய் மாத பிற்பகுதியில் 12ஆம் வீட்டில் அமர்வது சிறப்பு இல்லை. ராகுவினால் குடும்பத்தில் சில குழப்பங்கள் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது பேச்சில் கவனமாக இருங்க. எதையும் நிதானமாக ஹேண்டில் பண்ணுங்க.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் ராகு சுக்கிரன், இரண்டாம் வீட்டில் சூரியன், புதன் மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியனும் புதனும் ஜோடியாக பயணிக்கின்றனர். ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு, கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த மாதம் குடும்பத்தில் உங்களுக்கு சில சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படும். காரணம் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் சனி பார்வை விழுவது பாதிப்பை ஏற்படுத்தும். என்னதால் பிரச்சினை இருந்தாலும் குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் நிறைய நல்லது நடக்கும், தொழில் வியாபாரத்தில் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அஷ்டமத்து சனியால் திடீர் தடைகள் ஏற்படலாம்.

செய்ய வேண்டிய காரியங்களை கால காலத்தில் செய்து முடிங்க. வேலை செய்பவர்கள் அந்த வேலையில கவனமாக இருங்க.

புதிய வேலை மாறவோ, பிசினஸ் புதிதாக ஆரம்பிக்கவோ சரியான நேரமில்லை. செவ்வாய் சனி பார்வை உங்களுக்கு மாத பிற்பகுதியில சாதகமாக இல்லை என்பதால் திருமணம் சுப காரிய முயற்சிகள் பேச வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

சரியான நேரத்திற்கு சரியாக சாப்பிடுங்க வயிறு பிரச்சினைகள் வரலாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. திடீர் விபத்துக்கள் வரலாம். இந்த மாதம் பெரியதாக எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு ராசியில் உள்ள சூரியன்,புதன் மாத பிற்பகுதியில் குடும்ப ஸ்தானத்திற்கு போவது சிறப்பு. ஆறாம் வீட்டில் குரு, கேது, ஏழாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

பேச்சில் கவனமான இருக்க வேண்டும். அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வெளிநாடு தொடர்பான வேலைகளில் லாபம் கிடைக்கும். இதுநாள் வரை முடங்கியிருந்தவர்கள் இனி வேலை விசயமான பயணங்களை ஆரம்பிக்கலாம். விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு சஞ்சாரம் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. எந்த வேலையை தொட்டாலும் அது சட்டென்று முடியாமல் அலைச்சலை தரும்.

இந்த மாதம் புதிதாக கடன் எதுவும் வாங்காதீங்க இது சரியான நேரமில்லை என்றாலும் வீடு வாகனங்களை லோன் மூலம் வாங்கலாம். திருமண முயற்சிகளுக்கு இது சரியான நேரமில்லை தட்டிப்போய்க்கொண்டே இருக்கும்.

இந்த மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தினால் திடீர் மாற்றங்கள் திருப்புமுனைகள் ஏற்படும். உங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு மாத பிற்பகுதியில் கிடைப்பது சிறப்பு.

சிம்மம்

இந்த மாதம் சூரியன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் உங்க ராசியிலும் ஆட்சி பெற்று அமர்கிறார். கூடவே புதன் பயணிக்கிறார். குரு உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கேது உடன் பயணிக்கிறார். சனி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

இந்த மாதம் உங்க வாழ்க்கையில் இந்த மாதம் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாய் மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். அதே போல பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு கேது உடன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.

இத்தனை மாதங்களாக பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப் போகிறது. உங்க தொழில் இந்த மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. நிறைய லாபம் கிடைக்கும். திடீர் பண வரவும் அதிர்ஷ்டமும் வரும். உங்க பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

சின்னச் சின்ன விரைய செலவுகள் வந்தாலும் வருமானம் பல மடங்காக இருப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. உங்களுக்கு இதுநாள்வரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கி சாதகம் அதிகமாகும். உங்க எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நீங்க எடுக்கப் போகிற முயற்சிகள் எல்லாம் வெற்றியில் கிடைக்கும்.

உங்க வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குரு பார்வை கிடைப்பதால் திருமண முயற்சிகள் சுபமாக முடியும். இந்த மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் மாதம் என்பதால் உற்சாகமாக இருங்க.

கன்னி

இந்த மாதம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது குரு, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் ராகு சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் என கிரகங்கள் பயணத்தை தொடங்குகின்றன. செவ்வாய் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். விரைய ஸ்தானத்திற்கு சூரியனும் புதனும் வருகின்றனர். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலையில் செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலையில் திடீர் இடமாற்றம் கிடைக்கும்.

செவ்வாய் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணிக்கிறார். திருமணம் சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடுங்க. உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

என்னதான் உற்சாகமாக இருப்பது போல இருந்தாலும் ஒருவித பயத்தோடும் பதற்றத்தோடும் இருப்பீங்க. பூர்வ புண்ணியத்தில இருக்கிற சனி உங்க சந்தோஷத்தை அவ்வப்போது கெடுக்கப் பார்ப்பார் என்றாலும் பயப்படாதீங்க.

இந்த மாதம் விரைய ஸ்தானத்தில சூரியன் புதன் மாத பிற்பகுதியில் இணைவதால் நிறைய விரைய செலவுகள் வரலாம். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ வீண் வார்தைகளை விட வேண்டாம். கூடுமானவரை அதிகம் பேசாமல் இருப்பது குடும்பத்திலும் வேலையிலும் உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பாக இருக்கும்.

மாத முற்பகுதியில் நன்மைகள் அதிகமாக நடக்கும். மாத பிற்பகுதியில் சில சங்கடங்கள் ஏற்படும் கவனம் தேவை.