குப்பை என தூக்கி வீசும் இந்த பொருளில் 14 நாட்கள் டீ போட்டு குடிங்க… உடம்பில் பல அதிசய மாற்றங்கள் நிகழும்…!

உணவே மருந்து

நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரிச்சை விதை தேநீர்:

நாம் பேரச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எரிந்து விடுவோம். பேரிச்சை பழத்தின் விதையை நன்கு வறுத்து பொடி செய்து பிறகு அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை இதை குடிக்கலாம்.

மேலும் பேரிச்சை விதை தேநீரில் தாமிரம், செலினியம், இரும்பு போன்ற தாதுபுக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகை, தோல் பிரச்னைகள், ஞாபக மறதி ஆகியவை குணமாகும்.

ஆரஞ்சு தோல் தேநீர்

ஆரஞ்சு பழத் தோலின் வெள்ளை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதில் தட்டிய ஏலக்காய் சேர்த்து அந்த தண்ணீர் பாதியாக சுண்டிய பிறகு அதில் தேன் கலந்து குடித்து வரலாம்.

இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உடலில் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எது வராமல் தடுகிறது.