குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் இந்த படத்தில் நடித்துள்ளாரா? அதுவும் இந்த நடிகருக்கு தம்பியாகவா.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனுக்கு மக்கள் கொடுத்த ஆதரவை விட இந்த சீசனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது.

மக்களும் இந்நிகழ்ச்சி குறித்து அதிகம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்போது இந்த சீசனில் பல பெண்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் அஸ்வின். இவரைப் பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியவில்லை. சரி அவரை பற்றிய சினிமா பயணத்தை பார்ப்போம்.

அஸ்வின் குக் வித் கோமாளி 2 சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமடைந்துள்ளார். இவர் இதற்கு முன் ரெட்டை பால் குருவி, நினைக்க தெறிந்த மனமே சீரியல்களில் நடித்துள்ளார். காதல் ஒன்று கண்டேன் குறும்படத்தில் நடித்திருக்கிறார், Shades Of Kadhal என்ற ஆல்பம் பாடல் நடித்துள்ளார்.

இது தவிர நிறைய விளம்பரங்கள் நடித்துள்ள அஸ்வின், துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருக்கிறார்.