கிரிக்கெட் வீரரை மணக்க போகும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா!! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ.. அட இவரா? ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெரிய அந்தஸ்தினை கொண்டவர் ஷங்கர். அப்படி பல மாதங்களாக இவரின் வீட்டில் நடக்கவிருக்கும் திருமணம் பற்றிய செய்திகள் தான். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இவரை திருமணம் செய்து கொள்ள போகும் கிரிக்கெட் வீரர் குறித்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

இப்போது இவர் இயக்கத்தில் பெரிய அளவில் பட்ஜெட்டில் உருவாகி வரூம் மிக எதிர்பார்ப்புகள் உடைய திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் அப்போது இப்போது என இழுத்து கொண்டு பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. அந்த பட பிரச்சனை முடிவதற்கு தெலுங்கு ஸ்டார் ராம் சரண் மற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் படங்களை இயக்க தயாராகி விட்டார்.

மேலும் இந்நிலையில் ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் வரும் 27 ஆம் தேதி, பொள்ளாச்சியில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. அவரின் மகள் இப்போது மருத்துவராக இருந்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிளையும் ஒரு பெரிய கிரிகெட் வீரர் என்று தெரிகிறது. இவர் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்காததால், இவர் சில காலம் இலங்கையில் சென்று விளையாடியதாகவும், பின்னர் தன்னுடைய தந்தை தாமோதரனின் முயற்சியால், புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்க்கு கேப்டனாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருக்கும் ஊரடங்கில் சிறிது அளவிற்கு தளர்வுகள் ஏற்படுத்தபட்டதால் தன்னுடைய படங்களுக்கு பிரமாண்ட செட் போடுவதை போலவே, மகளின் திருமணத்திற்கும் பிரமாண்ட செட் போட திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதற்காக எந்திரன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்துராஜ் செட் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.