காது வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அ திர்ச்சி.. காதுக்குள் உயிரோடு என்ன இருந்தது தெரியுமா ?

செய்திகள்

தாய்லாந்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய இடது காதில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என பீட்சணுலோக் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சோதனை மேற்கொண்ட போது இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி ஒன்று உள்ளே ஒளிந்திருப்பதை கவனித்துள்ளார்.

பின்னர் 6 மிமீ நீளமுள்ள மைக்ரோ உறிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி அதனை வெளியில் எடுத்தார். பின்னர் இது குறித்து நோயாளியிடம் கேட்டறிந்த போது அவர் தன்னிடம் பல நாய்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அவை வயல்களில் ஓடவும் கால்வாய்களில் நீந்தவும் அனுமதிப்பதாக கூறியுள்ளார். அவற்றிடம் இருந்து தான் இந்த ஒட்டுண்ணி பரவியிருக்கலாம் என மருத்துவர் பிராடி தெரிவித்துள்ளார்.