காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ரொமான்டிக் ஹீரோ தான்.. ஒரு வேளை இவர் இந்த படத்தில் நடித்திருந்தால் தளபதி இடத்தை பிடித்து இருப்பாரோ..!!

செய்திகள்

நடிகர் விஜய் சராசரி வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் தி டீரென அவரது திரைத்துறை வாழ்க்கைக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான்.

தமிழ் சினிமாவில் காதல் படங்கள் எத்தனை வந்தாலும் அத்தனை படங்களுக்கும் முன்னோடியாக இருப்பது காதலுக்கு மரியாதை. இன்று வரைக்கும் கூட இப்படத்திற்கான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஏனென்றால் படத்தின் கதையில் காதலை அவ்வளவு அழகாக இயக்குனர் ஃபாசில் எடுத்துக்காட்டி இருப்பார்.

காதலுக்காக குடும்பத்தை விட்டு வெளியே வரும் காதலர்களான விஜய்யும், ஷாலினியும் ஒரு கட்டத்திற்குப் பிறகு குடும்பத்தின் பாசம் தான் முக்கியம் என மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து விடுவார்கள். அதன் பிறகு இவர்கள் இருவரும் எப்படி சேருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

ஆனால் இப்படத்தில் விஜய் நடிப்பதற்கு முன்பாக பிரபல ரொமான்டிக் ஹீரோவான அப்பாஸ் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் படத்தின் கதை  அப்பாஸ்க்கு பிடிக்காமல் போக நடிகர்  விஜய்க்கு இப்படத்தில்  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எது எப்படியோ ஒரு நல்ல வெற்றிப் படத்தை அப்பாஸ் படத்தை அப்பாஸ் தவறவிட்டு விட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்காக அப்பாஸ் கவலைப்படுகிறார் என்பதை அவரை கேட்டால் தான் தெரிய வந்துள்ளது.