காதலருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன விஜய் டிவி பிரபலம்.. திருமணமாகி 5 வருடங்களுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது.. என்ன குழந்தை தெரியுமா??

செய்திகள்

சின்னத்திரையில் பல வருடங்களாக நடிகையாகவும் ஒரு பக்கம் தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா பிரபாகர் அவருக்கு திருமணம் ஆனதில் இருந்து மீடியா பக்கம் வருவதை கொஞ்சம் தவிர்த்து இருந்தார்.

மேலும் அவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு பின்னர் இப்பொது தனக்கு குழந்தை பிறந்த தகவலை, குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வித்தியாசமாக அறிவித்துள்ளார். பலராலுமே ம றக்க முடியாத ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி பலருக்குமே பேவரிட்டான ஒருவராக இருந்து வந்தவர்.

இந்த தொகுப்பாளினிக்கு முன்பு ஆவர் நடன கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.

இவரை பலருக்குமே தெரிந்த சன் டிவியின் பிரபலமான ஒரு தொடராக இருந்து வந்த ‘மகாபாரதம்’ என்ற புராணத் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்திலும் நடித்தார். மேலும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டில் ஆனார். திருமணதிற்கு பின்னர் கூட சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து கொண்டு வரும் இவர் கர்ப்ப கால புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு கல்கி பிரயா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்து, ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் இரண்டு விஜய் டிவி பிரபலங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் ஆன நிலையில், இரண்டு விஜய் டிவி பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.