தனுஷின் காக்கா முட்டை படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டையா இது! அடுத்த ஹீரோவே இவர் தான்..!!

செய்திகள்

நடிகர்,எழுத்தாளர் ,தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் காக்கா முட்டை. மணிகண்டன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகி கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்தார். அதேபோல் அந்த படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அந்த படம் வெற்றி பெற்றபோது அந்த இரண்டு சிறுவர்களின் படிப்பு செலவை மொத்தமாக ஏற்றுக்கொள்வதாக தனுஷ் மேடையிலேயே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ். அப்பா படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஹீரோ போன்று உள்ளதால் வைரலாகி வருகிறது.