கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது.. நடிகை யார் தெரியுமா? இதோ வெளியாகிய அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

செய்திகள்

கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை புதிய உயரத்தையே அடைந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். வெளியாகும் புது புது நிகழ்சிகளும் தொடர்களும் இன்னும் பல மக்களும் முன்பை விட அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர்.

அதுவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்து பல தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக பல டிவி தொடர்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் தொலைக்கட்சிகளில் ஓன்று இரண்டு சீரியல் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆறு மணி ஆனாலே பத்து மணி வரை சீரியல்கள் தான் ஒளிபரப்பபடுகிறது.

இந்த லாக் டவுன் ஆரம்பித்ததில் இருந்து நிறைய பிரபலங்களுக்கு திருமணம் நடக்கிறது. நாமும் பிரபலங்களின் சந்தோஷ செய்தியை பதிவு செய்து வருகிறோம். இப்போது ஒரு பிரபல சீரியல் நடிகைக்கும் திருமணம் முடிந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற சீரியலில் கலக்கிய கீதாஞ்சலி தான். அவருக்கு சிம்பிளாக திருமணம் நடந்திருப்பதாக தெரிகிறது. திருமண கோலத்தில் தனது வருங்கால கணவருடன் அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் முதன்முறையாக ஷேர் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..