கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் நடந்த துயரம்! கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாபமாக ம ரணம்..!!

செய்திகள்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் ப ரி தாபமாக ப லியாகியுள்ளனர். கர்நாடகாவின் கலபுரஹா மாவட்டத்தில் அமைந்துள்ள அலண்ட்  நகரை சேர்ந்தவர் 25 வயதான இஃப்ரானா பேஹம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை தி டீரென பிரசவ வ லி ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூலம் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த வாகனத்தில், இஃப்ரானா பேஹம், அவரது உறவினர்களான ரூபியா பேஹம் (50), ஜெயஹுன்பி (60), முனீர் (28), முகமது அலி (38), சௌகித் அலி (29) என மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர்.

மேலும் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாறி மீது க ட்டுப்பாட்டை இ ழந்த கார் ப யங்கர வேகத்தில் மோ தியுள்ளது.

மோதிய வேகத்தில் காரும், லாறியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த ப ள்ளத்தில் க விழ்ந்தது. இந்த கோர வி பத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் ந சுங்கி ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ம ரணமடைந்தவர்களின் உ டல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

லாறி மீது கார் மோ திய வி பத்தில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உள்பட 7 பேர் ப லியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.